தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ரஷிய வீரர் ஆந்த்ரே குஸ்னெட்சோவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபி போக்னியை சாய்த்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.china-open

இங்கிலாந்து வீரர்கள் கெய்ல் எட்முன்ட், அலெக்சாண்டர் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக் குடியரசு) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் தர வரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை சாய்த்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

Comments
Loading...