Designed by Iniyas LTD
செஞ்சோலை வளாகத்திலும் சுடரேற்றி அஞ்சலி..

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொன்றொழிக்கப்படட தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் நேற்றையதினம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களால் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை இடம்பெற்ற 21 இடங்களில் எதிர்வரும் ஆறு தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நினைவு நிகழ்வுகளை தொடர்ந்து முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்தின் கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுடைய வளாகத்திலே நண்பகல் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த வளாகத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் ஆண்டிஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்றிருந்தனர்