தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வணக்க நிகழ்வு!

வெலிகந்தைப் பகுதியில் இணைத்துரோகிகளால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் தீயில் கருவான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார், ஈகைப்பேரொளி முருகதாசன், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் உட்பட 25 வீரத்தமிழ்மகன்கள், தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநிலம் வின்ரர்த்தூர் நகரில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.
அரங்கம் நிறைந்த வின்ரர்த்தூர் வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், கவிதைகளும் இடம்பெற்றதுடன் மாமனிதர் சந்திரநேரு அவர்களின் மகன் தாயகத்திலிருந்து தொலைபேசி வாயிலான தொடர்பைப் பேணி சில கருத்துக்களைக் கலந்து கொண்ட உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமையானது சிறப்பானதாக அமைந்திருந்தது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

vankkanikalvu-swiss-04 copy

vankkanikalvu-swiss-01 copy

Comments
Loading...