Designed by Iniyas LTD
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு…

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திலேயே இடம்பெற்றள்ளது.
இதன்போது வட மாகாணத்தின் அரசியல் நிலைமை மற்றும் வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் விடுதலை தொடர்பிலும் முன்னாள் முதலமைச்சர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.