தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை ஐஐடி வளாகத்தில் பெண் சடலம் கண்டெடுப்பு

சென்னை ஐஐடி வளாகம் பரந்து விரிந்த ஒன்றாகும். கல்வி வளாகம் மட்டுமின்றி மாணவர் தங்கும் விடுதிகளும், ஆசிரியர் குடியிருப்புகளும் வளாகத்தினுள் உள்ளன. கடுமையான பாதுகாப்பு நிறைந்த வளாகத்தில் வெளியாட்கள் நுழைவது கடினமானது. இந்நிலையில் பிரம்மபுத்திரா தங்கும் விடுதியின் பின்புறமுள்ள முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகின்ற இச்செய்தி வளாகத்திலுள்ளவர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments
Loading...