Designed by Iniyas LTD
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 8 நாட்கள் பார்வையாளர்களுக்கு தடை
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னாட்டு விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைவதற்கு 8 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பஞ்சாப் மாநில பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.