தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை மாநகரம் முழுவதும் 22,500 போலீசார் பாதுகாப்புப் பணி

இந்தியாவில் நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.download (4)

சென்னை மாநகரம் முழுவதும் 22,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள 9 துணைத் தூதரகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி போராட்டங்கள் நடைபெறும் இலங்கை துணைத் தூதரகப் பகுதியைச் சுற்றி, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் முதலமைச்சர் கொடியேற்ற உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதியில் மட்டும் 5,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 67 வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெறும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...