Designed by Iniyas LTD
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: ரூ.1080 கோடி கடன் தருகிறது ஜப்பான்
சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஜப்பான் 5 ஆயிரத்து 536 கோடி ரூபாய் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.
இதற்கான ஒப்புதல் அறிவிக்கையை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் Yutaka Kikuta வழங்கினார். இதை பொருளாதார விவகாரத் துறை இணைச் செயலாளர் செல்வகுமார் பெற்றுக் கொண்டார்.
இக்கடனில் ஆயிரத்து 80 கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 4வது பிரிவுக்கும் 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் அகமதாபாத் மெட்ரோவுக்கும் ஒதுக்கப்படும். இந்தியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக ஜப்பான் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.