தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை விமான நிலைய வளாகத்தில் ஒருவர் கொலை

airportசென்னை சர்வதேச விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் தேநீர் விற்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

 ரவி என்பவருக்கும், கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே தேநீர் விற்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியது. அப்போது கார்த்திகேயன் ரவியை கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.

 விமான நிலைய காவல்துறையினர் ரவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காமல், ரவி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Comments
Loading...