தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செம்மரம் கடத்த முயற்சி – தமிழத்தை சேர்ந்த 6 பேர் கைது

திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாகக்கூறி திருவண்ணாமலையை சேர்ந்த 6 பேரை, ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.  tirupati_arrest

திருப்பதி கரக்கம்பாடியில் இருந்து ரிக்ஷா காலனி வழியாக 30 பேர் கொண்ட கும்பல் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு படையினர், அவர்களை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் தப்பி சென்றனர். பிடிப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஊர்கவுண்டர் கிராமத்தை சேர்ந்த ராஜா, வெங்கடேஷ், முருகன், சேகர், கோபால், ஆனந்த் என தெரியவந்துள்ளது.

இவர்களிடம் இருந்து 25 கிலோ எடையுள்ள 6 அரிசி மூட்டைகள், 3 கொடாளி, 2 ரம்பம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை, ஜவ்வாது மலையை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போன்று, சீனிவாசமங்காபுரம்  பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக 40 பேர் கொண்ட கும்பல் சென்று கொண்டிருந்ததாகவும், அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசாரை கற்களால் தாக்கி தப்பி சென்றதாகவும் ஆந்திர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...