தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செவ்வாய் கிரகத்தில்  மிகப்பெரிய ஏரி இருப்பதற்கான ஆதாரங்கள்..

செவ்வாய் கிரகத்தில்  மிகப்பெரிய ஏரி இருப்பதற்கான ஆதாரங்களை  வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த  நீர் ஏரியானது   செவ்வாயின் தென் துருவத்தில் உள்ள பனிப்படலத்துக்குக் கீழ் இருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஏரியானது   சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மேலும்  ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள் இந்த இந்த ஏரியைக் கண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

Comments
Loading...