பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி 100க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலூசிஸ் தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் இடம்பெற்றது.
இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நி9லையில் இம்ரான் கான் கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி முன்னோக்கி சென்றுக் கொண்டிருப்ப்ஃஅதாகவும், தற்போதைய நிலவரப்படி 113 இடங்களில் தெஹ்ரிக்-இ-இன்சாப் முன்னிலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
இதன்காரணமாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நவாஷ் ஷெரீப் தம்பியும் பாகிஸ்தான் முஸ்லிம் லிக் கட்சியின் தற்போதைய தலைவருமான ஷெபஸ் ஷெரீப் நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ”தாங்கள் பணியை சரியாக செய்ததாகவும், முறைகேடு ஏதும் நடைபெறவில்லை” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.