Designed by Iniyas LTD
சோனியாவும், ராகுலும் 2 ஆண்டுகளுக்கு அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒய்வு பெறுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பியும் காங்கிரஸ் காரிய ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான ஜக்மீட் சிங் பிரார்தான் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் சோனியாவும், ராகுலும் 2 ஆண்டுகளுக்கு அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும். இந்த இருவரும் புதிய தலைவரிடம் காங்கிரஸ் கட்சியை ஒப்படைக்க வேண்டும்.
இதற்கு அவர்கள் இருவரும் மட்டும் பொறுப்பாகவில்லை. இது அனைவரின் பொறுப்பு. எனவே 2 ஆண்டு ஓய்வுக்கு பின்னர் சோனியா மற்றும் ராகுல் காந்தி புதிய எழுச்சியுடன் கட்சி பணி ஆற்ற முடியும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸ் தலைவரையும், துணைத் தலைவரையும் அரசியலைவிட்டு சிறிது காலம் விலகி இருக்குமாறு கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது