Designed by Iniyas LTD
சோமாலியாவில் இரட்டை தற்கொலை தாக்குதல்
சோமாலிய ஜிஹாதி குழுவான அல்-ஷபாப், சோமாலியத் தலைநகர் மொகதீஸூவில் ஹோட்டல் ஒன்றில் இரட்டை தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், நகர துணை மேயர் உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணைப் பிரதமரும் மேலும் இரண்டு அமைச்சர்களும் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஹோட்டலில் உள்ள தொழுகை அறையில் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும் மற்றைய குண்டு வெளியில் வாகனத் தரிப்பிடத்தில் வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க அதிகாரிகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற காரணத்தால் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அல் ஷபாப் குழுவினர் கூறியுள்ளனர்.