தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் நெருக்கடிக்குள்ளாகும் அபாயம்…

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகுமானால்,ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் காணப்படுவதாக  தெரிவிகபப்ட்டுள்ளது.

இதனை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெறுமானால் , வரவு செலவுத் திட்டமொன்றையும் முன்னெடுக்க முடியாமல் போகும் நிலமை ஏற்படும் எஅனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்காமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது பிரச்சினைக்குரியதாக மாறும் எனவும் அவர்  இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...