தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்கும் குற்ற வியல் பிரேரணை..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவியில் இருந்து நீக்கும் குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் ரகசிய நகர்வை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கிடையில் இது தொடர்பிலான இரண்டு சுற்று பேச்சு ஏற்கனவே நடந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அடுத்தடுத்த மாதங்களில் அதிரடியான சர்ச்சைக்குரிய முடிவுகளை ஜனாதிபதி எடுக்கலாமெனக் கருதுவதால் இந்த நகர்வை அவர்கள் இரகசியமாக மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வரவு – செலவு திட்ட இறுதி வாக்களிப்பு விவகாரத்தில் ஜனாதிபதியுடன் அதிருப்தியுடன் இருக்கும் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்லதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த இரகசிய காய்நகர்த்தல்கள் குறித்து அறிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் சினத்துடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பிரதமர் ரணில் இந்த நடவடிக்கையின் பின்னால் இருப்பதாக கருதும் ஜனாதிபதி, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சில செயற்பாடுகளை முன்னெடுக்கலாம எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெற்றிடமாகவுள்ள பிரதம நீதியரசர் மற்றும் கணக்காளர் நாயகம் பதவிகளுக்குப் புதியவர்களை நியமித்து அதனூடாகச் சில காய்நகர்த்தல்களை ஜனாதிபதி முன்னெடுக்கலாமெனக் கருதும் ஐக்கிய தேசியக் கட்சி, அதற்கு ஒரு அழுத்தத்தை வழங்கவே இந்த நடவடிக்கையை திரை மறைவில் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...