Designed by Iniyas LTD
ஜனாதிபதிக்கும் வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதிக்கும் வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
இத்தகவலை ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
இதேவேளை , வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு , 11,299 பேர் இடம்பெயர்ந்து 38 முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.