Designed by Iniyas LTD
தாயகத்தில் வெள்ளத்தினால் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு….
வடக்கில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
இத்தகவலை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வெள்ளா அனர்த்ததினால் பாதிக்கபப்ட்ட 3 ஆயிரத்து 602 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 229 பேர் 38 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 33 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிவரையான நிலவரப்படி இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 724 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 124 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 386 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 412 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்
மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.