Designed by Iniyas LTD
மும்மொழிகளில் மாத்திரம் வீதி பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்த பிரதமர் பணிப்புரை ….

இலங்கையிலுள்ள வீதி பெயர்ப்பலகைகளை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மாத்திரம் காட்சிப்படுத்த பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்புரையை உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு பிரதமர் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் அண்மைய காலங்களில் சீன மொழியில் சில வீதிகளுக்கு பெயர் இடப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.