Designed by Iniyas LTD
ஜனாதிபதி மாளிகையை ஆறு தினங்கள் மக்கள் பார்வையிடலாம்!
ஜனாதிபதி மாளிகை நாளை(புதன்கிழமை) முதல் எதிர்வரும் ஆறு தினங்களுக்கு மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தொடர்புடைய பதிவு
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளதாகவும்
ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியர் ஆட்சி காலத்தில் (1804) இந்த இல்லம் பிரித்தானிய ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கை ஆளுநரின் இல்லமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.