Designed by Iniyas LTD
ஜப்பானில் 100 பேர் பலி..
கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது.
சுமார் 16 அடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் மழை வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் 100 பேர் உயிரிழந்துள்ளதோடு 90 -க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த வெள்ளத்தில் 100 க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
