Designed by Iniyas LTD
ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
பனிப்பொழிவை பயன்படுத்தி பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் எல்லையில் உள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும், சர்வேச எல்லையிலும் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதுடன், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்தும் வருகின்றனர்.
தற்போது பனிக் காலம் தொடங்கி விட்டதால், அதனைப் பயன்படுத்தி அதிகளவில் ஊடுருவல் முயற்சியிலும், தாக்குதல் நடவடிக்கையிலும் பாகிஸ்தான் ஈடுபடும் என்று, இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் அதிகளவிலான ஊடுருவலால் எல்லையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியதால், தற்போது பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்குமாறும், ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.