Designed by Iniyas LTD
ஜாட் இன மக்களின் போராட்டம் 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
அரியானா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஜாட் இன மக்களின் போராட்டம் காரணமாக 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:- ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி காத்ரா-சென்னை சென்டிரல் இடையே நேற்று இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்:16032), ரத்து செய்யப்பட்டது. சண்டிகார்-கொச்சுவேலி இடையே வருகிற 24-ந் தேதி(புதன்கிழமை) இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12218), மாடகோன்-எர்ணாகுளம் இடையே இன்று இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்(10215), சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 5.15 மணிக்கு ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி காத்ரா இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16031) ரத்து செய்யப்படுகிறது. மேலும், மதுரையில் இருந்து டேராடூன் மற்றும் சண்டிகாருக்கு சென்னை சென்டிரல் வழியாக இன்று இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்(12687/22687), ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து நாளை பகல் 1.50 மணிக்கு மாடகோன் இயக்கப்படும் ரெயில்(10216) ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது