Designed by Iniyas LTD
ஜாட் இன மக்கள் சிறை நிரப்பு போராட்டம்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி ஜாட் இன மக்கள் இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க ஒரு சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரடே் வினய்சிங் கூறுகையில்; பதட்டம் நிறைந்த ஜிண்ட் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம். பாதுகாப்பு பணிக்கென உயர் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் பலரை தங்க வைக்க வேண்டாம் என லாட்ஜ் உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம் என்றார். அகில பாரதிய ஜாட் சமூக சமிதி அமைப்பு , ஜாட் யுவ ஏக்தா மஞ்சு அமைப்பினர் இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துகின்றனர்.
ஜாட் சமிதியின் மூத்த நிர்வாகியான பூப்சிங் கூறுகையில்: போலீசார் அப்பாவி மக்கள் பலரை கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் கடந்த போராட்டத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரரணம் ஏதும் வழங்கவில்லை . எங்கள் போராட்டம் தொடரும் என்றார். ஜாட் போராட்டத்தை முன்னிட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஜாட் இன போராட்டத்தினால் அரியானா, டில்லி, உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் ஆயிரம் கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.