தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி – சோனியா ஆலோசனை

modi-meets-sonia-sஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.

பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பின் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்களிடம் பிரதமர் விளக்கியதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் வாதங்களை முன் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 இதைத் தொடர்ந்து காங்கிஸ் தலைவர்கள் தங்களுக்குள் கலந்து பேச முடிவு செய்துள்ளதாகவும் ஜெட்லி தெரிவித்தார். எனவே சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து அரசுத் தரப்புக்கும் காங்கிரஸ் தரப்புக்கும் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளதாக ஜெட்லி தெரிவித்தார். முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்ளப்படும் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தனது இல்லத்தில் தேநீர் விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொள்ள சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

Comments
Loading...