Designed by Iniyas LTD
பிரதமர் மோடியுடன் சந்திப்பு: தில்லி சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தில்லி சென்றடைந்தார்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர், பிரதமர் மோடியை சந்திக்க இன்று காலை விமானம் மூலம் தில்லி சென்றார்.
மாலை 5.10 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய நிதி ஒதுக்கக் கோருவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் தில்லி செல்வது இதுவே முதல்முறை ஆகும்.