தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனிவாவில் இலங்கையைக் காப்பாற்ற பேய் விரட்டும் மகிந்த…………..

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு மகிந்த அரசாங்கம் பேய் விரட்டும் சடங்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பேய் விரட்டும் சடங்குஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் கொட்டகலை வீட்டில் இந்தச்சடங்கு இடம்பெறவுள்ளது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இதில் கலந்து கொள்வதற்கான  ஏற்பாடுகள் மும்முரமாக  இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின்  ஹைதராபாத்தில் உள்ள அமைச்சர் தொண்டமானின் நெருங்கிய நண்பியான ரூபா மகேந்தி ராம் மோகன்  இந்த பிசாசு விரட்டும் சடங்கிற்கு  உதவி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேய் விரட்டும் சடங்கிற்கு கேரள மாநிலத்திலிருந்து  ஒன்பது பேயோட்டுபவர்களை  தொண்டமானின் நண்பி அனுப்பி வைத்துள்ளாராம். ஜெனிவாவில் இலங்கையைக் காப்பாற்றுவதே  இந்தச் சடங்கின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அடுத்த மாதம் நாடு முழுவதும் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகளைத் தோற்கடிக்க போதி பூஜைகளை நடத்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...