Designed by Iniyas LTD
தமிழர் தாயகம் மட்டக்களப்பிலும் தமிழ்பெண்களை சிறீலங்கா படையில் இணைக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்.
தமிழர் தாயகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்பெண்களை சிறீலங்கா படையில் இணைக்கும் நடவடிக்கை கடந்த 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா படைப்பிரிவு தெரிவிக்கின்றது
இது தொடர்பாக நேர்முகப்பரீட்சைகள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்று நிறைவடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறீலங்கா படையில் 18 வயது முதல் 24 வயது வரையான தமிழ் பெண்கள் பலர் இணைந்து கொள்வதற்காக நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக சிறீலங்கா படைப்பிரிவு தெரிவிக்கின்றது. மட்டக்களப்பு சிறீலங்காபடை அதிகாரி மேஜர் ஹெட்டிக்கொலவின் வழிகாட்டலில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெற்றதாகவும் படை முகாம்களின் அலுவலகங்களில் இவர்களுக்கு கடமைகள் வழங்கப்படும் எனவும் சிறீலங்கா படை மகளிர் படைப்பிரிவு லெப்டினன்ட் லங்கா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் வவுனியா மற்றும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறீலங்கா இராணுவத்தில் இணைந்த யுவதிகள் வன்புணர்தலுக்குட்படுத்தப்பட்டு தென்பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே அதன் பின்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றால் இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.