Designed by Iniyas LTD
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரணாப், மோடி, ராஜ்நாத் சிங் சென்னை வருகை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று பிற்பகல் மணியளவில் சென்னை வருகிறார்கள்.
சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தனி விமானத்தில் இன்று பிற்பகல் சென்னை வருகிறார். இறுதி அஞ்சலிக்குப் பின்னர், மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.