தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டது: தமிழக அரசு

201610211934530398_Tamil-Nadu-Chief-Minister-Jayalalitha-interacting-and_SECVPF-450x256ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் சசிகலா தலைமையை ஏற்காமல் போட்டி அதிமுகவை உருவாக்கியுள்ள ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனையடுத்து, லண்டன் ரிச்சர்ட் தலைமையில், அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளனர்.  தமிழக சுகாதார துறை செயலாளர் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டார். 5 சிறப்பு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை தொடர்பான விவரங்களை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி செப் 22ம் தெதி மூச்சு திணறல் காரணமாக மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா. செப். 22ம் தேதி இரவு 10 மணிக்கு உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனைக்கு தொலைபேசி  மூலம் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது.

இதையடுத்து 10.25 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்சத்து குறைவு, நீரழிவு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 5 முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த போது அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

டிசம்பர் 4ம் தேதி இதய செயலிழப்பு ஏற்பட்ட போது ஜெயலலிதாவுக்கு உடல்நிலையை ஆய்வு செய்தனர். இதையடுத்து உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதயம் செயல்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Comments
Loading...