தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு

sasikalapushbhaமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் சசிகலா புஷ்பா.

இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சசிகலா புஷ்பா உச்சநீதின்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரது உடல் அடக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. எனவே அவரது மரணத்தில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் தமிழக மக்கள் சந்தேகிக்கின்றனர். ஆதலால், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மருத்துவமனையில் என்ன நடந்தது, என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆதலால், ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...