தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன் – சுப்பிரமணிய சுவாமி

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு.SWAMY_

ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன். தமிழக அரசுடன் வர்த்தக் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...