தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜேர்மனியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

ஜேர்மன் Münster பகுதியில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன் நேரப்படி இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக  30 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் எனவும்  பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை இது பயங்கரவாத சம்பவமாக கருதப்படுகின்ற போதிலும், உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...