Designed by Iniyas LTD
ஜேர்மன் கார் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி!
நேற்று காலை ஜேர்மன் தலைநகர் பெர்லின் ரோட்டில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இக்குண்டுத் தாக்குதலின் போது அக்காருக்குள் இருந்த சாரதி பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்நிலையில் இக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தலைநகர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, அதிக சனத் தொகை கூடுகின்ற தலைநகரில் குண்டு வெடித்துள்ளமையினால் மக்களிடையே அச்ச உணர்வை இது ஏற்படுத்தியுள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

