தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரவுடிகளை சென்னையை விட்டு வெளியேற்ற உத்தரவு!

1449558176-401தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, போலீஸ் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. அதாவது, தேர்தல் நடைபெற்று முடியும் வரை சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை ஊரை விட்டு வெளியேற்றலாமே என்று தேர்தல் ஆணையம் யோசனை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு போலீசார் தயாரித்த ரவுடிகள் பட்டியலில் 16,500 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதில், காவல் நிலைய வரலாற்று பதிவேட்டில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் பெயர் பட்டியலும் அடங்கும்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தற்போது உளவுத்துறையால் தயாரிக்கப்பட்டுள்ள ரவுடிகள் பட்டியலில் 20 சதவீதம் பெயர்கள் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 3,500 பேரும், குறைந்தது திருவள்ளூர் மாவட்டத்தில் 345 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்.

இதேபோல், நெல்லை மற்றும் புறநகர் பகுதியில் 1,980 பேரும், மதுரை மாவட்டத்தில் 1,300 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 பேரும், கோவை மாவட்டத்தில் 815 பேரும், சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா 700 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 416 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 475 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 655 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 605 பேரும் என இந்த ரவுடிகள் பட்டியலில் சுமார் 17,350 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சமூக விரோதிகள், ரவுடிகள், பிரச்சினையை தூண்டுபவர்கள் என பல்வேறு வகையின் அடிப்படையில் இந்த பட்டியலை உளவுத்துறையினர் தயாரித்து வழங்கியுள்ளனர்.

எனவே, குற்றப் பின்னணியில் உள்ள இந்த ரவுடிகளை சட்டமன்ற தேர்தலையொட்டி, ஊரை விட்டு வெளியேற்றினால் என்ன? என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை, ஊரை விட்டு வெளியேற்றலாமா? என்று உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Comments
Loading...