Designed by Iniyas LTD
’டக்- அவுட்’ ஆகி விசித்திர சாதனைகள் படைத்த சில வீரர்கள்
டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை விளையாடி ’டக்- அவுட்’ ஆகி விசித்திர சாதனைகள் படைத்த சில வீரர்கள் இருக்கிறார்கள். 1 ஓட்டம் கூட எடுக்காமல் அதிக பந்துகளை விளையாடி கடைசியில் ’டக்- அவுட்’ ஆனவர்களில் முதலிடத்தில் இருப்பவர் நியூசிலாந்து வீரர் ஜெஃப் ஆலட்.
இவர் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 55 பந்துகள் விளையாடி `டக்-அவுட்’ ஆனார்.
1984ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் எல்லிசன் இந்தியாவுக்கு எதிராக 52 பந்துகள் விளையாடி ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆகியிருக்கிறார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணியின் பீட்டர்: 51 பந்துகளில் டக்-அவுட்.
அவுஸ்திரேலிய வீரர் மைக் விட்னி: 1981ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 42 பந்துகளில் அவுட் ஆனார். பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர்: 2000ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 42 பந்துகளைச் சந்தித்து 1 ஓட்டம் கூட எடுக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.
வங்கதேச வீரர் மஞ்சுரல் இஸ்லாம்: இலங்கைக்கு எதிராக 2002ல், 41 பந்துகள் ஆடி வெளியேறினார். மேற்கிந்திய வீரர் கீத் ஆர்தர்டன்: இங்கிலாந்துக்கு எதிராக 1995ஆம் ஆண்டு 40 பந்துகளைச் சந்தித்து `டக்-அவுட்’ ஆகி வெளியேறினார்.