தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விராட் கோஹ்லி சச்சினிடம் பயிற்சி பெற்று வருகிறார்

துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் விராட் கோஹ்லி, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினிடம் பயிற்சி பெற்று வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்து மோசமாக தோற்றது.TH23_KOHLI_1338646f

இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோஹ்லியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. மேலும் இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில் கோஹ்லி, தனது துடுப்பாட்டத்தில் உள்ள தவறை திருத்த வேண்டும் என்று சச்சினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதை சச்சினும் ஏற்றுக் கொண்டு மும்பை கிரிக்கெட் சங்கத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கோஹ்லிக்கு துடுப்பாட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

குறிப்பாக ஆப்–ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை எப்படி ஆடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். மேலும் சச்சின் நடுவர் பகுதியில் நின்று கோஹ்லியின் துடுப்பாட்டத்தை உற்று கவனித்து அவர் செய்த தவறை திருத்தினார்.

சில மணி நேரம் தொடந்த இந்த பயிற்சி இன்னும் 2 அல்லது 3 நாட்கள் தொடரலாம் எனத் தெரிகிறது.

Comments
Loading...