Designed by Iniyas LTD
டிரம்ப்பின் சிலையை வாங்கிய அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்
இந்நிலையில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து ஐந்து நகரங்களில் காட்சிப்படுத்தி இருந்தது.
இந்த சிலைகளில் , நான்கை டிரம்ப் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்ப்பட்ட நிலையில் .ஒரு சிலை மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
லாஸ் வேகாஸ்
இந்நிலையில், சமீபத்தில் ஏலம் விடப்பட்ட டிரம்ப்பின் சிலையை .அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஸாக் பாகான்ஸ் ஏலம் எடுத்துள்ளார்.
இந்த சிலையை லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மியூசியத்தில் வைக்க போவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அமானுஷ்ய ஆராய்சியாளரால் டிரம்ப் சிலை ஏலம் எடுக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்க நெட்டிசன்கள் கேலியாக கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் டிரம்ப்பின் நிர்வாண சிலையை வைத்து சூனியம் செய்து அமெரிக்காவை டிரம்ப் இடம் இருந்து மீட்டெடுகலாம் என பலர் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
