தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டீசல் விலை அதிகரிப்பு – பெட்ரோல் விலை குறைப்பு

டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்துள்ளது. அதேநேரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.die

நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.  அதேநேரத்தில் டீசல் விலை 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.   சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையில், அதன் பயனை மத்திய அரசின் கலால் வரி விதிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் முழுமையாக பெற முடியவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Comments
Loading...