Designed by Iniyas LTD
டெல்லி முதலமைச்சர் மீது செருப்பு வீச்சு!
டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன கட்டுப்பாடு முறை இரண்டாம் கட்டமாக வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கினார்.
அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு நபர் திடீரென தனது செருப்பை கழற்றி கெஜ்ரிவாலை நோக்கி வீசியெறிந்தார். ஆனால், அவர் மீது படவில்லை. உடனடியாக அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் பெயர் வேத பிரகாஷ். ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி சேனா அமைப்பின் உறுப்பினர் என்பது தெரியவந்தது. சிஎன்ஜி ஸ்டிக்கர் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக கூறிய அந்த நபர், இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.