Designed by Iniyas LTD
Comments
Trending
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் 2016ஆம் ஆண்டு மற்றும் 20-17ஆ-ம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட் போட்டியை பகலிரவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தென்னாபிரிக்க வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ‘‘எங்களது வீரர்களுக்கு இரவில் இளஞ்சிவப்பு நிற பந்தை பயன்படுத்தி விளையாடியதில் போதிய அனுபவம் இல்லை. இத்தகைய சூழலில் ஆடுவது எங்களது வீரர்களுக்கு சாதகமாக இருக்காது.
இதனால் தான் அவர்கள் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதற்கு தயங்குகிறார்கள்’’ என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களின் சங்க தலைமை நிர்வாகி டோனி ஐரிஷ் கூறியுள்ளார்.
Recover your password.
A password will be e-mailed to you.