![chil;ds]()
குடியிருப்புக் கட்டடமொன்றின் 15 ஆவது மாடி மாடத்திலிருந்து விழுந்த 3 வயது பால கன் ஒருவன், அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் சீனாவில் ஜியா ங்ஸு மாகாணத்திலுள்ள சாங்ஸொயு நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிகி என்ற மேற்படி சிறுவன் அந்த மாடிக் கட்டடத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த புல் கட்டுகளின் மீது விழுந்ததாலேயே உயிர் தப்பியுள்ளான்.
எனினும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுவனது உடல்நலம் மோசமான நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.