தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெஸ்ட் வீரர்களுக்கான துடுப்பாட்ட தரவரிசையில் நியூஸிலாந்தின் வில்லியம்ஸன் முதலிடத்தில்

129162-359511da-96c7-11e4-9bd9-740a91fb6db7நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை தொடர்ந்து சர்வதேச கிரிக்கட் சபையால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான துடுப்பாட்ட தரவரிசையில் நியூஸிலாந்து வீரர் வில்லியம்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

முதலிடத்திலிருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை பின்தள்ளி 889 புள்ளிகளுடன் வில்லியம்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளார். 881 புள்ளிகளுடன் தென் ஆபிரிக்க வீரர் வில்லியர்ஸ் மூன்றாவது இடத்திலும் 874 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித் நான்காவது இடத்தையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்து பத்து நிலைகளுள் முறையே வோர்னர், யூனுஸ் கான், அம்லா, மெத்தியூஸ், அலாஸ்டர் குக் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Comments
Loading...