Designed by Iniyas LTD
ஸ்மார்ட் போன் வெடிக்காமல் இருக்க சிறந்த வழிகள் இதோ
சார்ஜ் ஏற்றும் பொழுது ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது என்று கேள்விபட்டிருப்போம். ஒரு பெண் தூங்கி கொண்டிருக்கும் போது சார்ஜில் உள்ள போனை பயன்படுத்தி வெடித்து சிதரியதை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு காரணம் பேட்டரியின் அம்சங்களில் உள்ள இருக்கும் சில குறைபாடுதான். ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு தான். ஒன்று மோசமான பேட்டரி அல்லது ஒரிஜினல் சார்ஜர் பயன்படுத்தாதது. இதில் எப்படி பேட்டரி வெடிக்கின்றது என்றும் அதை எப்படி நிறுத்துவது என்றும் காண்போம்.
தட்டையான பேட்டரிக்கள்
தற்பொழுது தட்டையான மெல்லிய ஸ்மார்ட் போன்கள் வருவதால் அவைகளுக்கு ஏற்ற மெல்லிய பேட்டரிக்களும் வருகின்றன. இதனால் positive மற்றும் negative தட்டுகளை தனிதனியாக வைக்க இடம் இருப்பதில்லை. இவைகளுக்கு இடையில் ஏதாவது நுழைந்தால் பிரச்சனைதான். அதிலும் தேவையான தரம் இல்லாத பேட்டரி என்றால் முற்றிலும் மோசம் தான்.
இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம்
பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் போனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கையேட்டின் உதவி கொண்டு வடிவமைக்கின்றனர். ஆனால் சிலர் பணத்தை சேமிக்க என்று கூறி பேட்டரி அதிகமாக வெப்பம் ஏறினால் சர்க்யூட்டை செயல் இழக்கம் செய்யும் fuseஐ பொருத்துவதில்லை. எனவே இரவு முழுவதும் சார்ஜில் போனை வைப்பவர்களுக்கு ஆபத்தில் முடியும்.



