தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டைனமைட்டை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை

சட்டவிரோதமாக டைனமைட்டை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் கிலோ கிராம் மீன்கள், பேலியகொட மத்திய மீன் சந்தையில் வைத்து இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்றொழில் அமைச்சின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு, பொலிஸார் மற்றும் விசேட அதிரப்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கின்னியா, புல்மோடை மற்றும் மாத்தறை பிரதேசங்களில் இருந்து இந்த மீன் தொகை, நான்கு வர்த்தகர்களால் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட அறிவிப்பு

இந்நிலையில் டைனமைட்டை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட  உள்ளதாக  கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...