தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டோனி உட்பட பலர் தங்களது பேட் எடையை குறைத்துள்ளனர்

ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் டோனி உட்பட பலர் தங்களது பேட் எடையை குறைத்துள்ளனர்.bat

கிரிக்கெட்டில் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளுக்கு என, எவ்வித வரையறையும் கிடையாது. பேட்டின் எடை, உயரம் மற்றும் அகலத்தை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்வர்.

இது தொடர்பாக, பேட் எடையை மாற்றி அமைப்பதில் அனுபவம் வாய்ந்த ராம் பண்டாரி கூறுகையில், டோனியின் பேட்டுகளை, வருண் ஆரோன் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்.

அந்த பேட்டுகள் 1,250 கிராம் எடை இருந்தன. இதை 50 முதல் 60 கிராம் எடை குறைத்து தருமாறு டோனி கேட்டுள்ளார்.

அதேபோல, பேட் கம்பெனிகள் டோனியின் பேட்டுகளை என்னிடம் நேரடியாக அனுப்பும். அப்போது மற்றவற்றுடன் கலந்து விடக் கூடாது என்பதற்காக பேட் நுனியில் அவரது பெயரை ஒட்டி அனுப்புவர்.

இதே போல ரெய்னா தனது பேட்டுகளை (1,170 முதல் 1,180 கிராம்) லோகேஷ் ராகுல் மூலமாக கொடுத்து நுனிப்பகுதி அதிக எடையுடன் இருப்பதாக தெரிவித்தார். அதையும் சரி செய்து கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...