தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ட்ரோலர் படகில் பிரான்சிற்கு சென்ற 21 பேர் கைது….

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த 21 பேருக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் 20ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக காண்பிக்கும் வகையில் ட்ரோலர் படகொன்றில் பயணம் செய்தபோது, கைது செய்யப்பட்டிருந்தனர்.

பிரான்ஸ் நோக்கி பயணிக்க முற்பட்ட வேளை, கொழும்பில் இருந்து 117 கடல்மைல் தூரத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் 19 ஆண்கள் உள்ளிட்ட 21 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...