Designed by Iniyas LTD
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் பொலிஸாரால் முற்றுகை..
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துவந்ததாகவும் பொலிஸார் கூரியுள்ளனர்.
அவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த விற்பனை நிலையம் முற்றுகையிடபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
சந்தேகநபர் யாழப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நாளை யாழ் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு பெருமளவு மாவா போதைப்பொருள்களுடன் , அதனைத் தயாரிக்கும் மூலப்பொருள்களும் மீகைப்பற்ரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.