தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தங்குமிட விடுதி எனும் பெயரில் பாலியல் தொழில் நிலையம்?

625.368.560.350.160.300.053.800.560.160.90-2-9-300x197குருணாகல் – குளியாப்பிட்டிய நகரில் தங்குமிட விடுதி என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை குளியாப்பிட்டிய மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வாடிக்கையாளர் போல் ஒருவரை அனுப்பி வைத்து பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சுற்றிவளைப்பில் விடுதியின் உரிமையாளருடன் 25 மற்றும் 26 வயதான இளம் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த யுவதிகள் வவுனியா மற்றும் சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments
Loading...