Designed by Iniyas LTD
தங்க வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
கலால் வரி விதிக்கப்பட்டதை கண்டித்து நாடெங்கிலும் உள்ள நகை வியாபாரிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 
தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிப்பு மீண்டும் அமல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். இதனைக் கண்டித்தும் 2 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகைக்கு நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பான் எண்ணை அளிக்க வேண்டியது அவசியம் என்கிற அறிவிப்பை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகை வியாபாரிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நகை வியாபாரிகள் இன்று முதல் மூன்று நாட்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்